TN- EMIS சிரமமின்றி Attendance செய்யும் முறை & வேகமாக செயல்பட - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 13, 2022

TN- EMIS சிரமமின்றி Attendance செய்யும் முறை & வேகமாக செயல்பட

 




Emis Attendance 100% அடைய வழிமுறைகள் & EMIS Attendance app வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்

ஆசிரியர்கள் தங்கள் Emis App ஐ Update செய்யவும்.


வருகை பதிவு மேற்கொள்ளும் முன்னர் Appஐ Logout and login  செய்யவும்.


அவ்வப்போது Emis App ன் Cache and History ஐ Clear செய்யவும் அல்லது வாரம் ஒரு முறை App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்து கொள்ளவும்


தலைமை ஆசிரியர்கள் Daily Status என்பதை தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது Network நன்றாக உள்ள இடத்தில் 9 மணிக்கு முன்பே முடித்து விடவும்.


ஆனால் வருகை பதிவு செய்வது பள்ளியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.


வருகைப் பதிவு செய்யும் போது Internet Slow எனில் Inter நன்றாக உள்ள இடத்தில் Save and Sync செய்து கொள்ளலாம்... இதற்கு அன்றைய தினம் நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுகிறது.


வருகை பதிவு முதலில் Mobile App ல் Store ஆகும் அதன் பின்னர் தான் server ஐ சென்றடையும்.


சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருப்பின் தலைமை ஆசிரியர் வருகை பதிவு செய்யலாம்.


தங்கள் பள்ளி EMIS Class and Section ல் தேவையற்ற Section இருப்பின் Delete செய்யவும்.

அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு புதிய (TN EMIS SCHOOL APP New version) செயலியில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.


Today status click, நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் synchronise செய்து விடவேண்டும். பின்னர் பள்ளிக்கு சென்று அன்றைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்துவிட லாம் (network தேவையில்லை).


Network கிடைக்கும் பட்சத்தில் தானாகவே serversக்கு சென்றுsave ஆகிவிடும். அன்றைய நாளுக்கு உரிய வகுப்பாசிரியர் விடுமுறை மற்றும் இதர பணிகளுக்கு சென்ற பட்சத்தில் அந்த ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் school loginல் வருகைப் பதிவு செய்துவிடவேண்டும்.


ஏற்கனவே அந்த வகுப்பாசிரியர் பள்ளிக்கு வருகை புரிந்து அந்த ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி loginல் வருகைப்பதிவு செய்தல் கூடாது. ஆசிரியரின் individual login மூலமாக மாணவர்கள் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாநில எமிஸ் மையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post Top Ad