'இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 5, 2022

'இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'

 




இனி வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

2ஆம் வகுப்புக்கான 2ஆவது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். 


வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவது அவசியம். தேர்வு நேரத்தில் முறைகேடுகளை தடுக்க 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும். தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 

வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்று பிற்பகல் நடக்கும் தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தேர்வு நடத்தப்படும். வெளியான வினாத்தாளில் உள்ள எந்தக் கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நடவடிக்கைக்காக விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.





Post Top Ad