ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.3.25 கோடி மோசடி - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 5, 2022

ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.3.25 கோடி மோசடி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம் ரூ.3.25 கோடி வரை மோசடி செய்த செம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியை 53, மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.


சுப்பிரமணி தனக்கு சென்னை தலைமை செயலக அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் அரசு பணி வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாரிமுத்துவிடம் 46, கூறினார். ஆசிரியர் பணி வாங்கி தர சுப்பிரமணி ரூ.12 லட்சம் கேட்டார். அதை நம்பி மாரிமுத்து ரூ.9.80 லட்சத்தை கொடுத்தார்.


ஆனால் சுப்பிரமணி வேலை வாங்கி தராமல் மோசடி செய்தார். பணத்தை திருப்பி கேட்ட போது சுப்பிரமணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் வினோதா விசாரித்தனர். 38 பேரிடம் சுப்பிரமணி ரூ.3.25 கோடி வரை மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Post Top Ad