TNPSC - Group 4 தேர்வு அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 29, 2022

TNPSC - Group 4 தேர்வு அறிவிப்பு

 




டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,


ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு:


ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுகளில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.


குரூப் 4 - 7,382 பணியிடங்களுக்கு தேர்வு:


7,382 காலி பணியிடங்களுக்குக்கான குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. 7,382 காலி பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும். 100 கேள்விகள் தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும்; 75 கேள்விகள் பொது அறிவு சம்மந்தப்பட்டவை. 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் தரவரிசை பட்டியலில் இடம்பெறுவார்கள்.


குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும்:


குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபருக்குள் காலியாகும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குரூப் 4 தேர்வு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்:


குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


Post Top Ad