தமிழக பட்ஜெட் - CPS ரத்தாகுமா - அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 17, 2022

தமிழக பட்ஜெட் - CPS ரத்தாகுமா - அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

 




'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தில் வெளியாகுமா' என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.தமிழக அரசு மார்ச் 18 ல் இந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. தமிழகத்தில் 1.4.2003க்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதுவரை 6 லட்சம் பேர் உள்ளனர்.


இவர்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற பலன்கள் இல்லை.தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என தெரிவித்தனர்.இதனால் மார்ச் 18 பட்ஜெட் கூட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பு வெளியாகுமா என அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமலாக்குவதாக அறிவித்துள்ளன. தமிழக அரசும் அதனை பின்பற்றினால், ரூ.25 ஆயிரம் கோடி உபரி நிதி கிடைக்கும், என்றார்.





Post Top Ad