CPS ரத்து கோரிக்கையை வலியுறுத்தி 22.03.2022ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 10, 2022

CPS ரத்து கோரிக்கையை வலியுறுத்தி 22.03.2022ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

 



9 சங்கங்கள் இணைந்த இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு!

-----------------------------------------------


இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று(09.03.2022) மாலை சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.


 கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும்,STFI மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் ச.மயில் தலைமை வகித்தார்.STFI  முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளரும்,தற்போதைய அகில இந்தியத் துணைத்தலைவரு மான தோழர் K. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி "தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 22.03.2022 செவ்வாய் மாலை மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டது.


மேலும் CPS ரத்து,NEP2020 ரத்து, பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மக்கள் நலன்,தேச நலன்,ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்தியத் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட ஊழியர் அமைப்புக்கள் மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்கள் நடத்துவதாக அறிவித்துள்ள அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ள 9 சங்கங்களும் பங்கேற்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது,


இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் ஆர். பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் தோழர் சே.பிரபாகரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அ. சங்கர்,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். பிரபுதாஸ்,தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் த. உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் செ.நா.ஜனார்த்தன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்,


தோழமையுடன்


 ச.மயில்

 மாநில ஒருங்கிணைப்பாளர்-STFI

பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


Post Top Ad