மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? - விரைவில் அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 18, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? - விரைவில் அறிவிப்பு!

 


சமீபத்தில், 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவது செல்லாது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த சூழலில் நேற்று (மார்ச்.16) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் DA உயர்வு முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இருந்தாலும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த மார்ச் 15ம் தேதியன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியின் போது, பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஏன் நிலையானதாக உள்ளது என்ற பல கேள்விகளுக்கு மத்திய அரசு தனது பதில்களை விளக்கியது. மேலும் தற்போதைய பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப DA மற்றும் DR தொகையை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.


இதற்கு ‘மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் DR முறையே தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது (AICPI0IW). விலைக்கு ஏற்ப DA அல்லது DR தொகையை வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கும் மற்றும் DA அல்லது DR தொகையை நிலையான 3 சதவீதத்தில் பராமரிக்காது’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.


சமையல் அம்மாவை அப்பாவிற்கு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, கோவப்பட்ட லட்சுமி – இன்றைய எபிசோட்!


இதற்கு முன்னதாக கடந்த 2021 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சராசரி சில்லறை பணவீக்கம் 5.01 சதவீதமாக இருந்தது. அதே சமயம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது 6.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு மீண்டும் 3 சதவீத அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வு மூலம், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 34 சதவீத DA இருக்கும். இந்த முடிவின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


அகவிலைப்படி (DA) என்பது பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தின் ஒரு அங்கமாகும். அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை சமாளிக்க, அரசு ஊழியர்களுக்கு இந்த பயனுள்ள ஊதியம் ஆண்டுக்கு 2 முறை என்ற அளவில் திருத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.





Post Top Ad