தமிழக பட்ஜெட் 2022 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன - Pdf - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 18, 2022

தமிழக பட்ஜெட் 2022 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன - Pdf

 



தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தியது பின்வருமாறு..


கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியது.

*நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதல்வரின் செயல்பாட்டிற்கான அங்கீகாரம்.முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.


*நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது


*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது. 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது.

தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.


* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு.


புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்; பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 


* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும். 


* இலக்கிய திருவிழாக்கள் நடத்த 5.6 கோடி ஒதுக்கீடு.


கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத் தொகை! 


*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16%-ல் இருந்து 3.08%ஆக குறையும்.


 தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு 

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு 


முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ₨1,547 கோடி நிதி 


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு


புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள் நடந்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு


உயர்தர மனநல சேவை வழங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ₨40 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 


காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ₨120 கோடி நிதி ஒதுக்கீடு 

சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ₨10 கோடியில் அமைக்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 


*தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.


தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.


*உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். முதல்வரின் முகவரி என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் செயல்படும் தவறான பிரசாரங்களைத் தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம்



*ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


*அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்


Click Here To Download - Full Budget Speech 2022 - Pdf





Post Top Ad