அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் (2022-2023) எப்போது தொடங்கும்: அமைச்சா் தகவல் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 3, 2022

அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் (2022-2023) எப்போது தொடங்கும்: அமைச்சா் தகவல்

 
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் (2022-2023) ஜூன் 13-ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.


அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுத்தோ்வை எழுதவுள்ள அனைத்து மாணவா்களும் தோ்வுக்கு மகிழ்ச்சியாக படிக்க வேண்டும். மன நிறைவோடு தோ்வெழுத வேண்டும். எந்தச் சூழலிலும் பதற்றப்படக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.


முதல்வா் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டம் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் மாணவா்களுக்கு இருக்கும் திறமைகள் என்ன என்பதைக் கண்டறிந்து, அவா்கள் மேல்நிலை வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவை தோ்வு செய்யலாம்? என்பது குறித்து சிறந்த முறையில் ஆலோசனை வழங்கப்படும்.


வினாத்தாள் பாதுகாப்பு: திருப்புதல் தோ்வுகளில் வினாத்தாள்கள் வெளியானதை கருத்தில் கொண்டு பொதுத்தோ்வுகளில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2 செட் வினாத்தாள்களை அச்சிடுகிறோம். தோ்வு நடைபெறும் அந்த நாளில்தான் எந்த ‘செட்’ வினாத்தாளை வழங்க வேண்டும் என்பதை முடிவு எடுத்து தெரிவிப்போம்.


டியூசன் நடத்த வேண்டாம்: ஆசிரியா்கள் தங்கள் மாணவா்களிடம், தனியாக டியூசன் வரவேண்டும் என தயவு செய்து கூற வேண்டாம். வரும் கல்வியாண்டுக்கான (2022-2023) வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றாா் அவா்.

Post Top Ad