மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் வரை 2 ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 30, 2022

மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் வரை 2 ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு

 

தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: 


பள்ளி வாகனம் இயக்குவதற்கு விதிமுறைகள் உள்ளன. பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகனத்திலிருந்து குழந்தைகளை இறக்கி விடும் போது 2 ஆசிரியர்கள் பணியிலிருந்து, வகுப்பறைக்கு மாணவர்கள் செல்லும் வரை கண்காணிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் பள்ளி நிர்வாகம்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.


பள்ளி நிர்வாகம் முறையாக விதிமுறைகளை பின்பற்றி இருந்தால் வேன் மோதி இறந்த 2ம் வகுப்பு மாணவனை காப்பாற்றி இருக்கலாம். இது தொடர்பாக வரும் 4ம் தேதி கல்வி அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. அதில் இதுபற்றி விவாதிப்போம். இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுப்போம். சில மாணவர்கள் பஸ் நிற்கும்போது ஏறாமல் ஓடும்போது ஏறுகிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இது தொடர்பாக பெற்றோர், ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Post Top Ad