19.03.2022 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - Commissioner Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 8, 2022

19.03.2022 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - Commissioner Proceedings

 

19-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை 20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்- பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள்


பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் கூட்டம் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெறுதல் - சார்ந்து.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ன்படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழுவாகும். அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.


அரசாணை நிலை எண் 42, பள்ளிக் கல்வித்துறை (SSA1) நாள் 06.03.2019ன்படி பாளி மேலாண்மைக் குழுவினை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை' மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகும். அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவினை மறுபட்டமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதுவதற்காக 20.03.2022 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்படவேண்டும்.


இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம்.


பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பள்ள மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.


தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பாளி மேலாண்மைக்குழு சார்ந்த கூட்டம் மட்டுமே அன்று நடைபெற வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை.


தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் 19.03.2022 சனிக்கிழமையன்று தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


மேற்காணும் விவரங்களை அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.













Post Top Ad