பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.03.2022 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 15, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.03.2022

 




திருக்குறள் :

பால்: பொருட்பால்


இயல்: நட்பியல்


அதிகாரம்:கூடா நட்பு


குறள் எண்:834


குறள் :

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையிற் பேதையார் இல்


பொருள்:

படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது


பழமொழி :

A liar is not believed when he speaks the truth

பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடினமாக மட்டும் அல்ல கவனமாகவும் உழைப்பேன் அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.


 2. மன நிறைவு வாழ்க்கையின் மந்திரக் கோல் எனவே எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவோடு இருப்பேன்


பொன்மொழி :


கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள். வாழ்வும் மேம்படும்.


பொது அறிவு :


1." துருப்பிடித்த கோள் " என்றழைக்கப்படும் கோள் எது? 


செவ்வாய் கோள். 





2. ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு எது? 


சூடான்.


English words & meanings :


chase on the rainbow - wasting time in trying to do something impossible, செய்ய முடியாத ஒன்றை செய்ய நினைப்பது, 


lightning fast - very fast, மின்னல் வேகம்


ஆரோக்ய வாழ்வு :


நார்த்தங்காய் வயிற்றுப்புண், வாந்தி, குமட்டல் போன்றவற்றை சரிசெய்யும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேன்சர் நோயை குணப்படுத்தும், வராமல் தடுக்கும். உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சி படுத்தும். பித்தம் நீங்க உதவுகிறது. இதனுடைய தோல் வலி நிவாரணியாக பயன்படுகிறது.


கணினி யுகம் :


Alt + F - File menu options in current program. 


Alt + E - Edit options in current program


மார்ச் 15

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.


நீதிக்கதை


வாய்மையே வெல்லும்


ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது. 


தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார். 


பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய் 


உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான். 


மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை. 


பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான். 


நீதி :

அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.


இன்றைய செய்திகள் - 15.03.2022

🌸 தேசிய குடற்புழு நீக்க வாரம்- பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.


🌸தமிழகம் முழுவதும் 91 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு.


🌸மார்ச் 16 முதல் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சகம் தகவல்.


🌸ஹிஜாப் விவகாரத்தில் நாளை தீர்ப்பு; பெங்களூர் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


🌸ரஷ்யா-உக்ரைன் இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.


🌸இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டையும்  வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.


Today's Headlines


🌸 National Deworming Week- The first deworming pill is being given to school children today.

🌸 91 Police Inspectors promoted to DSPs across Tamil Nadu

🌸March 16 to 12 to 14-year-olds will be vaccinated, according to the Union Ministry.

🌸Judgment tomorrow in the hijab case; there is 144 curfew to the whole of Bangalore. Restraining orders have been issued for a week.

🌸The fourth round of talk between Russia and Ukraine has begun.

🌸India won the 2nd Test against Sri Lanka and won the series.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்





Post Top Ad