பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.03.2022 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 8, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.03.2022

 




திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வாழ்க்கைத் துணை நலம்


குறள் எண் : 56

குறள்:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


பொருள்:

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.


பழமொழி :

Sadness and gladness succeed each other.



அல்லல் ஒரு காலம்.செல்வம் ஒரு காலம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன் 


2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்


பொன்மொழி :


அமைதியாக இருப்பவனை முட்டாள் என்று நினைத்துவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி....கௌதம புத்தர்


பொது அறிவு :


1. சேரன் தீவு என்றழைக்கப்படும் நாடு எது?


 இலங்கை. 


2. உலகிலேயே இளம் வயதில் யோகா மாஸ்டரான இந்திய வம்சவெளி சிறுவன் யார்?


 ரேயான்ஷ் சுரானி (துபாய்)


English words & meanings :


Costs an arm and leg - very costly, அதிக செலவு ஏற்படுத்த கூடிய. 


Cut some slack - give the workers some break, தொடர்ந்து பணி செய்பவர்களுக்கு சிறு இடைவெளி

ஆரோக்ய வாழ்வு :


வாழை இலையில் 'Germs killer'கிருமி நாசினி இருக்கிறது. இது உலகில் அழிக்கவே முடியாது எனும் கேன்சர் செல்களையும் அழிக்கும் திறன் வாழை இலைக்கு இருக்கிறது. வாழை இலையை துவையல் செய்து சாப்பிடலாம்.


கணினி யுகம் :


மார்ச் 08 - அனைத்துலக பெண்கள் நாள்


அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.


அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.


நீதிக்கதை


பூனையும் எலியும்


ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. 


கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது. 


நீதி :

எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.


இன்றைய செய்திகள்


08.03.22


◆தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


◆நாட்டின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


◆உக்ரைனில் இருந்து 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர்: வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.


◆பிஎச்டி, எம்.பில். பயிலும் மாற்றுத் திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


◆உக்ரைனில் சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு.


◆உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்.


◆மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து.


Today's Headlines


 ◆ The Department of School Education has informed that the year-end examination will be held at the school level for the 1st to 5th class in Tamil Nadu.

 ◆ Chief Minister Stalin inaugurated the country's first and largest floating solar power plant at Thoothukudi.

 ◆ 771 students from Ukraine have come to Tamil Nadu: Overseas Tamil Welfare Minister Senji Mastan informed.

 ◆ PhD, M.Phil.  The UGC said students with disabilities can apply for scholarships until March 31.

 ◆ Ceasefire in 4 cities in Ukraine, including Sumi: Russia announces.

 ◆ World Cup sniper competition: Third gold for India.

 ◆ Women's World Cup Cricket: New Zealand beat Bangladesh.


 Prepared by

Covai women ICT_போதிமரம்






Post Top Ad