Training - "Ennum Ezhuthum" For Primary Teachers - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 8, 2022

Training - "Ennum Ezhuthum" For Primary Teachers - SPD Proceedings

 


பயிற்சி - 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் - சார்பு

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு " எண்ணும் எழுத்தும் " என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பொருட்டு , பயிற்சிக்கான 12 கட்டகங்கள் மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது . இப்பயிற்சி கட்டகங்கள் அனைத்தும் பின்வரும் கால அட்டவணையின்படி TNEMIS வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.


 சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது User Id மற்றும் Password - மூலமாக Login செய்து இணையத்தள வாயிலாக இப்பயிற்சியினைப் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கட்டகங்கள் அனைத்திலும் காணொலிகள் , செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடு அடங்கியனவாக இருக்கும். ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியில் ஆசிரியர்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். நிர்ணயிக்கபட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பின் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள இயலும் . நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீளவும் அந்த கட்டகத்தில் பயிற்சி பெறுதல் வேண்டும்.


எண்ணும் எழுத்தும் இயக்கம் -"எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி"

ஆசிரியர்களுக்கான குறிப்புகள் - பயிற்சிக் கட்டக அமைப்பு

எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் "எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி"க்குத் தங்களை வரவேற்கிறோம். உங்கள் வசதிக்கு ஏற்றவகையில் இந்த இணையவழிக் கட்டகத்தைக் கற்று தெரிந்துக் கொள்ளலாம். இதில், காணொலிகள், உரைவளங்கள் (Texts), பலவிதமான செயல்பாடுகள் மற்றும் ஒப்படைப்பு (Assignment) வடிவில் வழங்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் ஆசிரியர் படித்து, கட்டகத்தை 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம். பாடம் தொடர்பான கற்றலை விரிவாக்குவதற்குக் கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


சான்றிதழ் கட்டகத்தின் முடிவில் ஆசிரியர்கள், ஒரு கொள்குறிவகை வினாடிவினாவிற்கு விடையளிக்க வேண்டும். இறுதி மதிப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெறும் ஆசிரியர்கள், இணையவழியில் தங்களுக்கான பங்கேற்புச் சான்றிதழைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றி EMIS-தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


EMIS . ஆசிரியர்கள், தங்களது பயனர் (User account) பக்கத்திற்குச் சென்று UserName மற்றும் Password-ஐ உட்புகுத்தித் தங்களுக்கான பயிற்சிக் கட்டகத்தை அணுகவும். - பயிற்சிக் கட்டகமானது PDF, காணொலி, இயங்கலைச் (online) செயல்பாடுகள், ஒப்படைப்புகள்(Assignments) மற்றும் கொள்குறிவகை (Multiple Cholce) மதிப்பீட்டு வினாக்களை உள்ளடக்கியதாக இருக்கும். . ஆசிரியர்கள், பயிற்சி நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டகத்தினை ஒவ்வொன்றாகக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும். 


* ஒவ்வொரு கட்டகத்தின் முடிவிலும் அந்தந்தப் பயிற்சிக்கான மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், . தேர்ச்சி பெறவில்லை எனில், மீண்டும் பயிற்சியை எடுத்துக் கொண்டு தேர்ச்சி பெறும்வரையில் பயிற்சியினைத் தொடர்தல் வேண்டும். . ஒவ்வொரு பயிற்சியிலும் ஒப்படைப்புகள் (Assignments) இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கட்டகங்கள் குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே இணையத்தில் இருக்கும். எனவே அதற்குள் அந்தந்த கட்டகங்களை ஆசிரியர்கள் நிறைவு செய்ய வேண்டும். . இறுதியாக, தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பயிற்சியை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.










Click Here To Download - "Ennum Ezhuthum" For Primary Teachers - SPD Proceedings - Pdf









Post Top Ad