11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..? - கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 3, 2022

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..? - கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளதால் பிளஸ் 1 பொது தேர்வை இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளதால் பிளஸ் 1 பொது தேர்வை இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.1 முதல் டிச.23 வரை நேரடி வகுப்புகள் வழியே மூன்றரை மாதங்கள் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சில பள்ளிகளில் விடுமுறை வழங்கப்பட்டது. பின் கொரோனா அதிகரிப்பு காரணமாக டிச. 23 முதல் ஜன.31 வரை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.


இந்நிலையில் கொரோனா ஊரடங்கு மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பல பள்ளிகளில் மாணவர்களை பல குழுக்களாக பிரித்து அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்தி வருகின்றன.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கு குறைவாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே தற்போதைய சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட முக்கிய பாடங்களை முடிக்கவே குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவை என்று சொல்லப்படுகிறது.


இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதால் பிளஸ் 1 மாணவர்களுக்கு பெரும்பாலான பாடங்கள் இன்னும் நடத்தப்படவில்லை. பள்ளி கல்வி துறை வெளியிட்ட பாட திட்ட கால அட்டவணையிலும் பிளஸ் 1 'போர்ஷன்'இடம் பெறவில்லை. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு போல பிளஸ் 1 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.


தற்போதைய பிளஸ் 1 மாணவர்கள் கடந்த ஆண்டும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் 'ஆல் பாஸ்' முறையில் தேர்ச்சி பெற்று வந்தனர். அதற்கு முன் 9ம் வகுப்புக்கும் அவர்கள் தேர்வு எழுதவில்லை. எனவே 2 ஆண்டுகளாக தேர்வுகளையே எழுதாமல் உள்ள பிளஸ் 1 மாணவர்களுக்கு திடீரென பொது தேர்வு நடத்தினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் பல மாணவர்கள் பிளஸ் 1 வகுப்புடன் பள்ளி படிப்பில் இடைநிற்றல் ஆகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






Post Top Ad