10,12 - ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தி குறிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 15, 2022

10,12 - ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தி குறிப்பு

 

திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!


தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் ( State Board ) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.02.2022 முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் , சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடகங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில் , துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


ஆய்வில் , திருவண்ணாமலை மாவட்டம் , போலூர் , ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசி , ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது.


 இதற்குக் காரணமான பள்ளிகளைச் சார்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . மேலும் , இத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் . ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









Post Top Ad