PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வேலையை விட்டாலும் பென்ஷன்! EPFO திட்டம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 3, 2021

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வேலையை விட்டாலும் பென்ஷன்! EPFO திட்டம்!

 




இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் சுமார் 48 லட்சம் பேர் பிஎப் கணக்கில் இருந்து விலகி உள்ளதாக இபிஎப்ஓ தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் EPFO ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



பிஎப்:


இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகின்றனர். பணி காலம் நிறைவு பெற்ற பின் பிஎப் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வபோது ஈபிஎப்ஓ புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்  ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியால் பிஎப் கணக்குதாரர்கள் பிஎப் தொகையை எடுக்க முற்பட்டனர். இந்த நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலையை விட்ட மக்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை தயாரித்து வருகிறது.






Post Top Ad