ஒமிக்ரான் தொற்று குழந்தைகளை தாக்குமா?: ICMR நிறுவனர் டாக்டர் மோகன் குப்தே விளக்கம்..!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 16, 2021

ஒமிக்ரான் தொற்று குழந்தைகளை தாக்குமா?: ICMR நிறுவனர் டாக்டர் மோகன் குப்தே விளக்கம்..!!

 





குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று தாக்குமா? என்பது குறித்து டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார்.  அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றினை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும்  ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். செய்தி ஒன்றிற்கு காணொலி வாயிலாக பேட்டியளித்த டாக்டர் மோகன் குப்தே, தென்னாபிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறார். இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவத்துறையில் உள் கட்டமைப்புகளை ஒன்றிய, மாநில அரசுகள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து வருவதாகவும் மோகன் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டாலும் கூட அச்சமடைய தேவையில்லை என்றும் டாக்டர் மோகன் கூறியிருக்கிறார். பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படாது என்றும் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார்.




Post Top Ad