இணைய வர்த்தக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய தடை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 16, 2021

இணைய வர்த்தக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய தடை

 




டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு வருகின்ற 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இணையதள வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிமாற்றத்தின் போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றன.



இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்வதை தடை செய்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த விதிமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பண பரிமாற்றத்தின் போதும் வாடிக்கையாளர் தனது கார்டில் எண் பெயர் காலாவதி தேதி சிவிவி, ரகசிய எண் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.



Post Top Ad