சர்க்கரை அளவை எப்படி சோதிக்க வேண்டும்? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 13, 2021

சர்க்கரை அளவை எப்படி சோதிக்க வேண்டும்?

 
நம் வாழக்கையில் ஒருமுறையாவது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து பார்ப்பது மிக அவசியம். அதுவே நீரிழிவு நோயாளிகளாக இருக்கும் பட்சத்தில் தங்கள் இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு பரிசோதனை செய்யும் போதுதான் உடலில் ரத்த சர்க்கரைக்கு அளவின் மாற்றங்கள் குறித்து கவனிக்க முடியும். ஏனெனில் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது உங்கள் உடல் சுகாதார நிலைமையை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் எதிர்கால சிக்கல்கள் தவிர்க்கப்படலாம்.


தற்போது வீட்டில் இருந்தபடியே இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருப்பினும், உங்கள் இரத்த சர்க்கரையை எவ்வாறு பரிசோதிக்கலாம் மற்றும் அதைச் எப்போது பரிசோதிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.உங்கள் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பரிசோதிப்பது?


விரல் நுனி மீட்டர்கள்: உங்கள் விரல் நுனியில் ஊசி குத்துவதன் மூலம் பெறப்படும் இரத்தத்தைப் பயன்படுத்தி உங்கள் இரத்த சர்க்கரை அளவை சோதிக்க பல கருவிகள் உள்ளன. ஒரு சிறிய, கூர்மையான ஊசி கட்டைவிரல் அல்லது மற்ற விறல் நுனியை துளைக்கப் பயன்படுகிறது. இது 'லான்செட்' என்று அழைக்கப்படுகிறது. லான்செட்டில் இருந்து இரத்தத்தை ஒரு மெல்லிய துண்டுக்கு மாற்றலாம். அதன்பிறகு பதினைந்து வினாடிகளுக்குள் முடிவுகளைக் காண்பிக்கும் சோதனை மீட்டரில் இந்த சோதனைத் துண்டு செருகப்பட வேண்டும். சில நேரங்களில் சோதனை முடிவுகள் இருபது வினாடிகளுக்குப் பிறகும் காட்டப்படாமல் போகலாம். அப்படி நடந்தால் நீங்கள் சோதனையை சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம்.


இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் முழு செயல்முறையையும் மீண்டும் செய்து சரியான முடிவுகளை பெற வேண்டும். மேலும் தற்போது உங்கள் சராசரி இரத்த சர்க்கரை அளவைக் கூறும் கருவிகளும் மற்றும் உங்கள் கடந்தகால சோதனை முடிவுகளின் விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களைக் காட்டும் மீட்டர்களும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப உள்ளூர் மருந்தகத்தில் இரத்த சர்க்கரை மீட்டர் மற்றும் மெல்லிய துண்டுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.இரத்த சர்க்கரை அளவை சோதிக்க மற்ற வழிகள் :


தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்பு: இது இடைநிலை குளுக்கோஸ் அளவிடும் சாதனங்கள் என்றும் அழைக்கப்படும். இந்த சாதனங்கள் இன்சுலின் பம்ப்களுடன் இணைக்கப்பட்டு, காலப்போக்கில் உங்கள் முடிவுகளில் ஏற்பட்ட போக்குகள் மற்றும் வடிவங்களைக் காண்பிக்கும்.


சரியான நேரத்தில் உணவு சாப்பிட்டால் குளுக்கோஸ் அதிகரிப்பை குறைக்கலாம் - ஆய்வு


மற்ற உடல் தளங்களைச் சோதிக்கும் மீட்டர்கள்: கட்டைவிரலின் அடிப்பகுதி, மேல் கை, முன்கை மற்றும் தொடை போன்ற பிற உடல் பாகங்களில் இருந்து உங்கள் இரத்த சர்க்கரையை சோதிக்க அனுமதிக்கும் மாற்று விருப்பங்களும் தற்போது கிடைக்கின்றன. இரத்த சர்க்கரையை பரிசோதிக்கக்கூடிய பல தளங்கள் உடலில் இருந்தாலும், விரல் நுனியில் இருந்து பெறப்படும் ரத்தத்தை பரிசோதனை செய்வது துல்லியமாக இருக்கும். ஏனெனில் இது சிறிதளவு மாற்றங்களைக் கண்டறிய உதவும். குறிப்பாக நீங்கள் உணவு அல்லது உடற்பயிற்சி செய்த உடனேயே ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்தும். எனவே குறைந்த இரத்தச் சர்க்கரைக் உள்ளவர்கள் தங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்.உங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போது சோதிக்க வேண்டும்?


நீரிழிவு நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை ஒரு நாளைக்கு பல முறை சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்கள் இரத்த சர்க்கரை இயல்பை விட குறைந்தது போல இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். உணவு, உடற்பயிற்சிகள், வாகனம் ஓட்டுவதற்கு முன் மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

Post Top Ad