கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ் அப்பில் பெறலாம்.. இதோ ஈஸியான வழி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 13, 2021

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ் அப்பில் பெறலாம்.. இதோ ஈஸியான வழி!

 




கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் வாட்ஸ்அப் மூலம் மிக எளிதாக சான்றிதழை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்ளும் போது மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் பயணிகளிடம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் கையில் இருக்க வேண்டும் என்ற சூழல் இப்போது உள்ளது. திட்டமிட்ட பயணம் என்றால் எல்லாவற்றையும் கையில் சரியாக வைத்திருப்போம். திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் சோதனை சாவடிகளில் கோவிட்- சர்டிபிகேட் இல்லாமல் சங்கடப்படும் சூழல் உள்ளது.


அந்த சமயத்தில் Message Inbox-க்குள் சென்று தடுப்பூசி போட்ட நாளில் அனுப்பிய லிங்க் தேடுவது, கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும்  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் எடுக்கும் பணிகளில் ஈடுபடுவது சிரமத்தை ஏற்படுத்தும். செல்போன்  சிக்னல் சரியாக இல்லையென்றால் மேலும் கால தாமதமாகும்.


இதுபோன்ற சூழலை தவிர்க்க வாட்ஸ்அப்பில் எளிய  முறையில் சான்றிதழை பெறும் வசதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. MYGOV CORONA HELPDESK மூலம் மிக எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பெறலாம்.



கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான எளிய வழிகள்


வாட்ஸ்அப்பில்  Covid Certificate பதிவிறக்கம் செய்வது எப்படி?


+91 9013151515 என்ற எண்ணை செல்போனில் பதிவு செய்து கொள்ளவும்


இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் இருந்து Covid Certificate என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும்


உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை பதிவு செய்ய வேண்டும்


அதன்பின் ஒரு குறுஞ்செய்தி வரும். நீங்கள் 1 என டைப் செய்து அனுப்பினால் சான்றிதழ் கிடைத்துவிடும்.இந்த சேவையின் மூலம் கொரோனா தடுப்பூசி  சான்றிதழை மிக வேகமாகவும் எளிதாகவும் பெற முடியும்.





Post Top Ad