வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டி! வங்கிகளின் பட்டியல் இதோ! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 20, 2021

வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டி! வங்கிகளின் பட்டியல் இதோ!

 




இந்தியாவில் தற்போது வங்கிகளும் வீட்டு நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் வழங்குகின்றன. குறைந்த வட்டியில் வீட்டு கடன் வழங்கும் வங்கிகள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.



வீட்டுக் கடன் :


ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் அல்லது சுய வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் பெரும் கனவாக உள்ளது. அதனை அடைவதற்காக சிறுக சிறுக சேமிக்க தொடங்குகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி காரணமாக சேமிப்பு வீட்டை கட்டி முடிப்பதற்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் மக்கள் வீட்டு கடன் பெற நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நாடுகின்றனர். வங்கிகளும் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வந்துள்ளனர்.


கொடாக் மகிந்திரா வங்கிதான் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. அங்கு வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. ரூ.75 லட்சம் வரையிலான கடன்களை 6.5 % வட்டியில் பெறலாம். 75 லட்சத்திற்கு அதிகமான தொகைக்கு வட்டி விகிதம் அதிகரிக்கும் மற்ற வங்கிகளை தொடர்ந்து YES பேங்க் 6.70 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அடுத்தடுத்து பண்டிகை வரவுள்ளதால் பிராசஸிங் கட்டணம் இல்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக் கடனுக்கு 6.60 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


பேங்க் ஆஃப் பரோடா 6.75 சதவீத வீட்டுக் கடனை வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 6.7 சதவீத வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது இந்த வட்டி விகிதம் 31 டிசம்பர் 2021 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி வங்கி 6.75% வட்டியில் வீட்டு கடன் வழங்குகிறது. தற்போது இந்த வீட்டு கடன் வட்டி பண்டிகை கால சிறப்பு சலுகையாக குறைக்கப்பட்டு 6.70% என்ற சதவீதத்தில் வழங்குகிறது.




Post Top Ad