தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை - 48 மணி நேரத்திற்க அதி கனமழை பெய்யும் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 1, 2021

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை - 48 மணி நேரத்திற்க அதி கனமழை பெய்யும்

 
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ,தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நாமக்கல் கரூர் அரியலூர் பெரம்பலூர் திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் ,சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 4ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 5ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்பட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.இன்று முதல் வருகின்ற 3ஆம் தேதி வரை மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தமிழக கடலோரப் பகுதிகள் குமரிக்கடல் ஆகிய  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post Top Ad