உங்க செல்போனுக்கு இந்த மெசேஜ் வருகிறாதா? ஜாக்கிரதை மறந்தும் திறக்காதீர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 14, 2021

உங்க செல்போனுக்கு இந்த மெசேஜ் வருகிறாதா? ஜாக்கிரதை மறந்தும் திறக்காதீர்கள்

 





நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்தாலோ அல்லது உங்களுக்கு அழைக்கும் கஸ்டமர் கேர் ஏதாவது அப்ளிகேசனை அல்லது ரிமோட் அக்சஸ் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்ய சொன்னால் தயவு செய்து இன்ஸ்டால் செய்யாதீர்கள். ஒருவேளை இன்ஸ்டால் செய்தால், உங்கள் மொபைலின் அனைத்து செயல்களும் அவருக்கு தெரிந்துவிடும். அதாவது நீங்கள் மொபைலில் செய்யும் எந்த ஒரு செயலையும் பார்க்க முடியும் .


சமீபத்தில் இப்படி வந்த கஸ்டமர் கேர் கால் மூலம் சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 85000 ரூபாயை இழந்துள்ளார். அவருக்கு ஒடிபியை பார்த்து பணத்தை பறித்துள்ளனர். சமீபத்தில் மத்திய அரசும் இதுபற்றி எச்சரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி எஸ்பிஐ, வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் வங்கி , ஐசிஐசிஐ வங்கி என எல்லா வங்கிகளுமே இதுபற்றி அலர்ட் கொடுத்துள்ளார்கள். ஏன், ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகியவற்றில் இருந்து கூட எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். 


எனவே ரிமோர்ட் ஆக்சஸ் அப்ளிகேசன் என்றால் என்ன, உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தால் என்ன நடக்கும். சமீபத்தில் குற்றங்கள் அதிகரித்தது ஏன் என்பது உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம். இந்த ரிமோர்ட் ஆக்சஸ் அப்ளிகேசன் மூலம் மொபைலை ஹேக் செய்வது என்பது புதிது அல்ல. கடந்த இரண்டு வருடமாக நடந்து வருகிறது. சமீப காலமாக இது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகமும் கடந்த சில மாதத்திற்கு முன்பு எச்சரிக்கையும் விடுத்தது.



பணம் எடுக்க முடியாது 

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது மகனின் ஆப்ரேசனுக்காக 90000 பணத்தை சேமித்து வைத்துள்ளார். சரியாக ஆப்ரேசனுக்கு இரண்டு நாளுக்கு முன்னர் அவருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது அதாவது நீங்கள் பேடிஎம் கேஒய்சியை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அந்த பிராசஸ் பண்ணாததால் உங்கள் அக்கவுண்டில் இருந்து பணமும் எடுக்க முடியாது. பணமும் டெபாசிட் பண்ண முடியாது என்று எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த எஸ்எம்எஸ்சை பார்த்ததும் குழந்தையின் அப்பாவும் அம்மாவும் மிகவும் பதற்றமாகி விட்டார்கள்.


மோசடி நபர் 

உடனே அதில் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைத்தனர். அவர்களிடம் பேசிய கஸ்டமர் கேர் நபர், ஒன்றும் பயப்படாதீர்கள் என்று கூறி நல்லவர் போல் நடித்து, ஒரு கால் மூலமாகவே உங்கள் கேஒய்சியை கம்ப்ளீட் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். ஒரு அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்ய சொல்லியிருக்கிறார். அதாவது quick support என்ற அப்ளிகேசனை மொபைலில் இன்ஸ்டால் செய்ய சொல்லியிருக்கிறார் அந்த மோசடி நபர்.



90000 திருட்டு 

இன்ஸ்டால் செய்ய சொன்னதும், ஒரு கோடு நபர் அந்த மொபைலுக்கு வரும், அந்த கோடு நம்பரையும் இவர்களிடம் கேட்டு வாங்கிய நபர், அந்த பெற்றோரின் போன் நம்பரை ஆக்சஸ் பண்ண தொடங்கிவிட்டார். அதன்பிறகு இரண்டு மூன்று நிமிடத்தில் சில தகவல்களை வாங்கிய பிறகு 90000 பணத்தை அக்கவுண்டில் இருந்து மொத்தமாக உருவிய மோசடி நபர், அதன்பின்னர் போனை கட் பண்ணிவிட்டார். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் சென்னையில் சிம்மை ஆக்டிவேசன் செய்வதாக நூதன முறையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 85000 பணத்தை பறித்துள்ளார் ஒரு மோசடி பேர்வழி. இதேபோல் 2லட்சம், 3லட்சம், 6 லட்சம் என பல லட்சம் ரூபாய்களை ரிமோட் அக்சஸ் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்ய வைத்து கொள்ளையடித்துள்ளார்கள்.


ஏன் இதை வைத்து ஏமாற்றம் 

எனவே kyc என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம். உங்களுக்கு வங்கியில் அக்கவுண்ட் உள்ளது என்றால், அக்கவுண்ட் வைத்திருப்பது நீங்கள் தானா என்பதை சரிபார்க்கும் ஒரு வெரிபிகேசன் பிராசஸ் தான். இதில்முறைகேடுகள் அதிகரித்ததால் எந்த வங்கியும், எந்த நிதி நிறுவனமும் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாகவோ அல்லது வேறு ஆன்லைன் தளங்களின் மூலமாகவே செய்வதே இல்லை.. இதை வங்கிகளும் அறிவித்துவிட்டன. எஸ்பிஐ கூட டுவிட்டரில் இதுபற்றி அலர்ட் கொடுத்துள்ளார்கள்.யாராவது ஏதேனும் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்ய சொன்னால் தயவு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்..



3 ஆப்கள் 

ரிமோர்ட் ஆக்சஸ் அப்ளிகேசன் நிறைய உள்ளது. ஆனால் திருடர்கள் இன்ஸ்டால் செய்ய சொல்வது இந்த மூன்று அப்ளிகேசன் தான். அவற்றை இப்போது பார்ப்போம். team viewer, quick support, any desk ஆகிய மூன்று அப்ளிகேசனை தான் இன்ஸ்டால் செய்ய சொல்கிறார்கள். இந்த அப்ளிகேசன் எல்லாமே ஒரு நல்ல நோக்கத்திற்கு கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் இருந்து வேலை செய்வதற்காக இதை கொண்டுவந்தார்கள். இதை டிஜிட்டல் திருடர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். எப்படி என்றால், நீங்கள் அமேசான், நெட்பிளிக்ஸில் பணம் கட்டி மெம்பர்சிப் வாங்கி படம் பார்ப்பீர்கள். உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை கொடுத்து உங்கள் நண்பரையும் படம் பார்க்க சொல்வீர்கள். இதே கான்செப்ட் தான் இந்த ரிமோர்ட் அப்ளிகேசனுக்கும் உள்ளது. ஒரு யூசர் நேம், ஒரு பாஸ்வேர்டு உள்ளது. இதை ஒரே டைமில் இரண்டு பேர் பயன்படுத்தலாம். தற்போதைய நிலையில் ஒடிடி ஆப்களின் அப்ளிகேசனை கொடுத்தால் அவரால் அந்த ஆப் அல்லது அப்ளிகேசனை மட்டும் தான் ஓபன் பண்ண முடியும். மற்ற ஆப்களை ஓபன் பண்ண முடியாது. ஆனால் ரிமோர்ட் ஆக்சஸ் அப்ளிகேசனுடைய கோர்டு நம்பர் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் என்னவெல்லாம் பார்க்கிறீர்களோ அதை அவர் பார்க்க முடியும். அதாவது போனில் போட்டோ ஓபன் பண்ணி பார்த்தால் அவரால் அதை பார்க்க முடியும். உங்களுக்கு ஏதோவது ஓடிபி வந்தால் அவராலும் அதை பார்க்க முடியும். நீங்கள் கேமரா ஆன் பண்ணினால் அவராலும் அதை பார்க்க முடியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.



வேலை தருவதாக மோசடி 

பேங்க் கஸ்டமர் கேர் என்று இல்லை. உணவு டெலிவரி கஸ்டமர் கேர், ப்ளிப்கார்டில் இருந்து பேசுகிறேன். அமேசானில் இருந்து பேசுகிறேன் என்று வருவதையும் நம்பாதீர்கள். அதேபோல் அமேசான், ப்ளிப்கார்டில் பார்ட் டைம் வேலை என்று வரும் மெசேஜ்களையும் ஓபன் செய்து லிங்கிற்குள் போகாதீர்கள். அது ஆபத்தில் முடியும். மேலும் உங்கள் செல்போனில் யார் எதை இன்ஸ்டால் செய்ய சொன்னாலும் தயவு செய்து செய்யாதீர்கள்.. ஒடிபி உள்ளிட்ட எந்த தகவலையும் பகிராதீர்கள். பரிசு விழுந்துள்ளதாக வரும் மெசேஜ் அல்லது இதை செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும் என்றோ மெசேஜ்கள் எதையுமே நம்பாதீர்கள். உங்களுக்கு லோன் தருவதாக வரும் மெசேஜ்கள் அல்லது கால்களையும் நம்பி எதையும் செய்யாதீர்கள். உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பும் எந்த மெசேஜ்களையும் நம்பாதீர்கள். அப்படி நம்பி எதுவும் செய்தால், நீங்கள் உங்கள் பணத்தை இழக்க நேரிடும்.. ஜாக்கிரதை மக்களே..







Post Top Ad