Flash News : 9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் செப். 1 முதல் நேரடி வகுப்பு - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை செப். 15 பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, August 21, 2021

Flash News : 9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் செப். 1 முதல் நேரடி வகுப்பு - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை செப். 15 பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு.

 


கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு :


செப்டம்பர் 1 ந் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.


1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்று அறிவிக்கப்படும்.





கூடுதல் விபரம் :


முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :


* 1.9.2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். 

இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 


* மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.



அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.


 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.


Click Here To Download - School And College reopen  TN Press News - Pdf




Post Top Ad