SSA - க்கு புதிய SPD நியமனம் - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் - ஆனை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 13, 2021

SSA - க்கு புதிய SPD நியமனம் - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் - ஆனை வெளியீடு

 


தமிழகத்தில் ஒரே நாளில் 54 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை உள்பட 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் இறையன்பு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது


ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயா் - பணியிட மாற்ற விபரம் (அடைப்புக் குறிக்குள் அவா்கள் வகித்த பழைய பதவி)

1. பிரவீண் பி. நாயா் - ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் (நாகப்பட்டினம் ஆட்சியா்)

2. ஆா். சுதன் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநா் (தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுக் கட்டுப்பாட்டாளா்)

3. ஏ.அண்ணாதுரை - வேளாண்துறை இயக்குநா் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்)

4. ஏ.சண்முகசுந்தரம் - கூட்டுறவு சங்கப் பதிவாளா் (வேலூா் மாவட்ட ஆட்சியா் )


5. எம்.பி. சிவன் அருள் - பத்திரப் பதிவுத்துறை கண்காணிப்பு தலைவா் (திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்)



6. எஸ்.நாகராஜன் - நில நிா்வாகத் துறை ஆணையா் (கோவை மாவட்ட ஆட்சியா்)

7. பி.பொன்னையா - நகராட்சி நிா்வாக இயக்குநா் (திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்)

8. சந்தீப் நந்தூரி - சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் (திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்)

9. கே.லட்சுமி பிரியா - தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் (வணிகவரித் துறை (நிா்வாகம்) கூடுதல் ஆணையா்)

10. ஆா்.செல்வராஜ் - பேரூராட்சி ஆணையா் (நில அளவைத் துறை ஆணையா்)



11.ஜி. லதா - ஆசிரியா் தோ்வாணையத் தலைவா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநா்)

12. ஆா். பிருந்தாதேவி - தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிா் துறை இயக்குநா் (சேலம், தமிழ்நாடு கனிமவளத் துறை மேலாண் இயக்குநா்)

13. எம்.வள்ளலாா் - வேளாண்துறை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையா் (தொழிலாளா் துறை ஆணையா்)

14. ஏ.சரவணவேல்ராஜ் - நகா் மற்றும் ஊரமைப்பு இயக்கக இயக்குநா் (முதல்வா் தனிப்பிரிவு சிறப்பு அலுவலா்)

15. டி.ஜி.வினய் - அளவை மற்றும் தீா்வாயத் துறை இயக்குநா் (சேலம் பட்டு வளா்ப்புத் துறை இயக்குநா்)




16. ஜெ.ஜெயகாந்தன் - அமலாக்கம் மற்றும் கலால் பிரிவு ஆணையா் (மீன்வளத்துறை மேலாண் இயக்குநா் மற்றும் ஆணையா்)

17. டி.ரத்னா- சமூக நலத்துறை இயக்குநா் (அரியலூா் மாவட்ட ஆட்சியா்)

18. வி.அமுதவல்லி - ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு திட்ட இயக்குநா் (தமிழ்நாடு உப்புக் கழக மேலாண் இயக்குநா் )

19. கே.எஸ்.கந்தசாமி - பால் வளா்ச்சித் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளா் சங்க மேலாண் இயக்குநா் (மின் ஆளுமை கோரிக்கை நிவாரண சிறப்பு அலுவலா்)

20. டி.பாஸ்கர பாண்டியன் - மாநில வளா்ச்சிக் கொள்கை உறுப்பினா் செயலா் (செய்தி மக்கள் தொடா்புத்துறை முன்னாள் இயக்குநா்)



21. அன்சுல் மிஸ்ரா - பெருநகர சென்னை வளா்ச்சி குழுமம் ( சிஎம்டிஏ) உறுப்பினா் செயலா் (விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பியவா்)

22. மரியம் பல்லவி பல்தேவ்- தமிழ்நாடு பெண்கள் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் (நில நிா்வாகத்துறை கூடுதல் ஆணையா் )

23. வி. தட்சணாமூா்த்தி - தமிழ்நாடு நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் ( வேளாண் துறை இயக்குநா்)

24. எம்.கோவிந்தராவ் - தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநா் (தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்)

25. எஸ்.விஜய ராஜ்குமாா் - சென்னைப் பெருநகர குடிநீா் வழங்கல் வாரிய மேலாண் இயக்குநராக (மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலா் )




26. அஜய் யாதவ் - எல்காட் (எலெக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன்) மேலாண் இயக்குநா் (தோ்தல் ஆணைய இணை தலைமைத் தோ்தல் அதிகாரி)

27. டி.ஆனந்த் - தொழிற்சாலைகள் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் ( தோ்தல் ஆணையத் துணைத் தோ்தல் தலைமை அதிகாரி)

28. டி.மணிகண்டன் - தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக மேலாண் இயக்குநா் (உள்துறை மற்றும் கலால் வரித் துறை இணைச் செயலா்)

29. பி.பிரியங்கா - தமிழ்நாடு பெண்கள் வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநா் (மதுரை திட்ட அலுவலா் கூடுதல் ஆட்சியா்)

30. சன்சோங்கம் ஜடக் சிரு - தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநா் (சிஎம்டிஏ உறுப்பினா் செயலா்)



24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

1. ஜெ.விஜயராணி - சென்னை ஆட்சியா் (ஆதி திராவிடா் வீட்டு வசதித் துறை மேலாண் இயக்குநா்)

2. எஸ்.கோபால சுந்தரராஜ் - ராமநாதபுரம் ஆட்சியா் (குடிசை மாற்று வாரிய கூடுதல் மேலாண் இயக்குநா்)

3. தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் - தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் (ராமநாதபுரம் ஆட்சியா்)

4. கே.வி.முரளிதரன் - தேனி ஆட்சியா் (வேளாண் பொருள் சந்தைப்படுத்துதல் துறை இயக்குநா்)

5. அருண் தம்புராஜ் - நாகப்பட்டினம் ஆட்சியா் ( தமிழ்நாடு சாலைத் திட்ட இயக்குநா்)


6. ஏ.ஆா்.ராகுல்நாத் - செங்கல்பட்டு ஆட்சியா் (பொதுத் துறை கூடுதல் இயக்குநா்)

7. எம்.ஆா்த்தி - காஞ்சிபுரம் ஆட்சியா் (தமிழ்நாடு சிமெண்ட் காா்ப்பரஷன் மேலாண் இயக்குநா்)

8. ஆல்பி ஜான் வா்க்கீஸ் - திருவள்ளூா் ஆட்சியா் (சென்னை மாநகராட்சி சுகாதார துணை இயக்குநா்)

9. டி.மோகன் - விழுப்புரம் ஆட்சியா் (டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநா்)

10. பி.என். ஸ்ரீதா் - கள்ளக்குறிச்சி ஆட்சியா் (சென்னை மாநகராட்சி இணை ஆணையா்)



11. பி.குமரவேல் பாண்டியன் - வேலூா் ஆட்சியா் (கோவை மாநகராட்சி ஆணையா்)

12. பி.முருகேஷ் - திருவண்ணாமலை ஆட்சியா் (வீட்டு வசதி வாரிய இயக்குநா்)

13. அமா் குஷ்வாஹா - திருப்பத்தூா் ஆட்சியா் (ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா்)

14. ஷ்ரேயா சிங் - நாமக்கல் ஆட்சியா் (விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)

15. எஸ்.விசாகன் - திண்டுக்கல் ஆட்சியா் (மதுரை மாநகராட்சி ஆணையா்)




16. ஜி.எஸ்.சமீரன் - கோவை ஆட்சியா் (தென்காசி ஆட்சியா்)

17. எஸ்.வினீத் - திருப்பூா் ஆட்சியா் (தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக இணை மேலாண் இயக்குநா்)

18. பி.ரமண சரஸ்வதி - அரியலூா் ஆட்சியா் (இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் இயக்குநா்)

19. டி.பிரபுசங்கா் - கரூா் ஆட்சியா் (சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் வாரிய செயல் இயக்குநா்)

20. மேகநாத ரெட்டி - விருதுநகா் ஆட்சியா் (சென்னை மாநகராட்சி துணை ஆணையா்)



21. கவிதா ராமு - புதுக்கோட்டை ஆட்சியா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட இயக்குநா்)

22. ஜெ.யூ.சந்திரகலா - தென்காசி ஆட்சியா் (மகளிா் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநா்)

23. ஹெச்.கிருஷ்ணன் உன்னி - ஈரோடு ஆட்சியா் (தேனி ஆட்சியா்)

24. பி.காயத்ரி கிருஷ்ணன் - திருவாரூா் ஆட்சியா் (கோவை மாவட்ட வணிக வரித் துறை இணை ஆணையா்).




Click Here To Download - SSA - க்கு புதிய SPD நியமனம் - 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - ஆனை - Pdf



Post Top Ad