#Breaking: மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை" -அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 7, 2021

#Breaking: மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை" -அமைச்சர் அன்பில் மகேஷ்


மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளையே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குமுறைப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் எவ்வாறு உடையணிய வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றுதான் வகுப்பெடுக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.


நீட் தேர்வு

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் நீட் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. அந்த தேர்வை நடத்த விடமாட்டோம்.


மீறி நடத்தினால் போராடுவோம். மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்; 12ம் வகுப்பு மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.


அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் இருக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அடுத்து அவர் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.


முழுக்க முழுக்க ஆசிரியைகளையே நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.













Post Top Ad