தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 24, 2021

தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும்

 



தாமதமாக பணிக்கு வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களை, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.



பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சுழற்சி முறை ஆசிரியர்கள், பணிக்கு தாமதமாக வருவதால், சேர்க்கைக்காக வரும் மாணவர்களும், பெற்றோரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.



இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தவும், தாமதமாக வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளனர்.ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. 


எனவே, தலைமை ஆசிரியர்கள் காலதாமதமாக பணிக்கு வரக்கூடாது.சேர்க்கைக்கு வரும் மாணவ - மாணவியரை காத்திருக்க வைக்கக் கூடாது. காலை, 9:15 மணிக்குள் பள்ளியில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.காலதாமதமாக பணிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post Top Ad