தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 28, 2021

தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 





திமுக அரசு, தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளிஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்திஉள்ளனர்.



தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இணையவழி மூலம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தீனதயாள் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், மகளிரணி செயலாளர் உஷா ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ‘புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து’ என்பதை நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இதேபோல், ‘ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற ஆணையிட வேண்டும். ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு துறையின் ஒன்றிய தலைமையிடத்தில் வைத்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பை மாவட்ட ஆட்சியர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டும்.



கற்றல்-கற்பித்தல் நிகழ்ச்சிகள்


கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தற்போது திறக்கும் சூழல் இல்லாதபோது மாணவர்களின் கற்றலில் நிகழ்வு பின் தங்காத வகையில் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றல் - கற்பித்தல் நிகழ்ச்சிகளை அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் ஆசிரியர்கள், அரசு கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி சென்றடைய அனைவரும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.



கடந்த ஆண்டு முதலே அங்கன்வாடி மற்றும் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெறவில்லை. ஆனால்தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்று அதற்கான கட்டணங்கள் ஆயிரக்கணக்கில் பெறப்பட்டது.


தனியார் பள்ளிகளில் ஐந்து வயது முடிந்த மாணவரை நேரடியாக முதல் வகுப்பில் சேர்க்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் இல்லாத தமிழகமாக மாற்றும் முயற்சியாக அதற்கென வல்லுநர் குழு அமைத்த முதல்வருக்கு நன்றி’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Post Top Ad