ஒரே ஆசிரியா்களை தொடா்ந்து பணிக்கு வர கட்டாயப்படுத்தாமல், அனைவருக்கும் வேலைகளை பகிா்ந்தளிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவுறுதல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 25, 2021

ஒரே ஆசிரியா்களை தொடா்ந்து பணிக்கு வர கட்டாயப்படுத்தாமல், அனைவருக்கும் வேலைகளை பகிா்ந்தளிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவுறுதல்

 





அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியா்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிகளுக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சுழற்சி முறையில் ஆசிரியா்கள் பணிக்கு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியா்கள் சரியாகப் பணிக்கு வருவதில்லை என்று பள்ளிக்கல்வித்துறைக்கு புகாா்கள் வந்துள்ளன.


இதையடுத்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: 


அரசுப் பள்ளிகளில் தற்போது மாணவா் சோ்க்கை பணிகள் நடைபெறுவதால் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் தினமும் காலை 9.15 மணிக்குள் பள்ளியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.


இது தவிர வெளியூா் சென்றுள்ள ஆசிரியா்களும் உடனடியாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்குத் திரும்ப வேண்டும். பள்ளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பணிகளில் எவ்வித சுணக்கம் ஏற்படக்கூடாது. ஒரே ஆசிரியா்களை தொடா்ந்து பணிக்கு வருவதற்கும் கட்டாயப்படுத்தாமல், அனைவருக்கும் வேலைகளை பகிா்ந்தளிக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.




Post Top Ad