10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு மதிப்பெண் நிர்ணயம் எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 17, 2021

10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு மதிப்பெண் நிர்ணயம் எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 






தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 மாதங்கள், இந்த  ஆண்டு 6 மாதங்கள் என மொத்தம் 15 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான மதிப்பெண் பட்டியலில் ‘‘ஆல்பாஸ்’ என்று குறிப்பிடப்படும் என்று பள்ளிகல்வி அமைச்சர் தெரிவித்து இருந்தார். 


இந்நிலையில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேரும்போது அவர்களுக்கு 9ம்  வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும்.இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை  ஆணையர் வெளியிட்டுள்ளவிவரம் வருமாறு: பத்தாம் வகுப்பு முடித்து மேனிலைக் கல்வி படிப்பதற்கும், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் இதர மேல்படிப்புக்கு செல்வதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியமாகிறது.


தற்போது 2021-2022ம் கல்வி  ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் 2019-2020கல்வி ஆண்டில் 9ம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வும் நடக்காத நிலையில் பிளஸ் 1 வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கை பணிக்காக மட்டுமே ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகிறது. இதன்படி,


*  2019-2020ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு படித்த மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எதில், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

*  காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அந்த பாடத்துக்கு தேர்ச்சி  மதிப்பெண்(35) வழங்கலாம்.


*  காலாண்டு மற்றும் அரையாண்டுத்  தேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு மதிப்பெண் (35) வழங்கலாம்.

*  காலாண்டு, அரயைாண்டுத் தேர்வில் கலந்து கொண்டு ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.


*  இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றி மதிப்பெண் பட்டியல்கள் வழங்க வேண்டும். அந்த மதிப்பெண் பட்டியலின் அடிப்படையிலும் நடைமுறையில் உள்ள பிற விதிகளையும் பின்பற்றி பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.



இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கும் அரசாணை 48ன்படி, பத்தாம்  வகுப்புக்கான தேர்ச்சி சான்று அரசுத் தேர்வுகள்  இயக்ககம் மூலம் பின்னர் வழங்கப்படும்.


காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், மாணவர்களுக்கு 35 என்று தேர்ச்சி மதிப்பெண் வழங்கலாம். தேர்வுக்கு ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மதிப்பெண் (35) வழங்கலாம்





Post Top Ad