SBI Alert: வங்கியின் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 31, 2021

SBI Alert: வங்கியின் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்

 




கொரோனா தொற்று மற்றும் முழு முடக்கம் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத மற்ற கிளைகளில் பணத்தை எடுப்பதற்கான வரம்புகளை ரூ.25 ஆயிரமாக அந்த வங்கி நிர்வாகம் அதிகரித்துள்ளது.


அதாவது, கொரோனா காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், எஸ்பிஐ செக் புக் அல்லது படிவத்தின் மூலம் கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளில் இருந்து பணத்தை எடுப்பததற்கான வரம்புகளை அதிகரித்துள்ளது என்று வங்கி ட்வீட் செய்தது. 


சேமிப்பு வங்கி பாஸ் புக் உடன் Self என்ற வகையில் மூலம் பணத்தை எடுத்தல் (படிவத்தைப் பயன்படுத்தி) ஒரு நாளைக்கு ரூ .25,000 ஆக திருத்தப்பட்டுள்ளது. Self காசோலை மூலம் பணத்தை எடுத்தல் (செக்கை பயன்படுத்தி) ரூ .1 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் காசோலையைப் மட்டும் பயன்படுத்தி மூன்றாம் தரப்பினரால் பணத்தைத் திரும்பப் பெறுவது ரூ .50,000 ஆக மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மூன்றாம் தரப்பினருக்கு படிவங்கள் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கப்படாது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பினரின் KYC சமர்ப்பிக்கப்பட வேண்டும். P பிரிவு வாடிக்கையாளர்களுக்காக, ஜூலை 1 ஆம் தேதி முதல் பணத்தை திரும்பப் பெறுவதற்கான திருத்தப்பட்ட வரம்பு அமல் படுத்தப்படும், இது செப்டம்பர் 30, 2021 வரை அமலில் இருக்கும்.



முன்னதாக, இரு நாட்களுக்கு முன், ஏடிஎம் மற்றும் கிளையில் கணக்கில் இருந்து கணக்கை எடுப்பதற்கான விதிகளில், நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் போது ரூ .15 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று SBI தெரிவித்துள்ளது. முதல் நான்கு முறை எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Post Top Ad