பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் - அமைச்சர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 24, 2021

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் - அமைச்சர்

 







பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பிளஸ் 2 தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். 



பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம். 






Post Top Ad