உ.பி - கொரோனா - 1,621 ஆசிரியர்கள் பலி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, May 18, 2021

உ.பி - கொரோனா - 1,621 ஆசிரியர்கள் பலி

 







கொரோனா தீவிரமாகத் தொடங்கிய நிலையில் 5 மாநில தேர்தல் மட்டுமின்றி, உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலும் நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 15, 19, 26, 29ம் தேதிகளில் 4 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 



தேர்தல் முடிந்த பின், அப்பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்பு காரணமாக பலரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 



இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 1,621 பேர் கொரோனா தாக்குதல் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.




கொரோனா காலம் என்பதால் பல ஆசிரியர் தேர்தல் பணிக்கு வர அஞ்சினர். ஆனால் அவர்களை உபி அரசு வலுக்கட்டாயமாக, டிஸ்மிஸ் போன்ற பயத்தை காட்டி பணியில் ஈடுபடுத்தியது. இது குறித்து சங்கத் தலைவர் தினேஷ் சந்திர சர்மா கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உயிரிழப்பு 1,621 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் மன அழுத்ததால் உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.








Post Top Ad