கரோனாவால் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி : டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வழங்கினார் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 23, 2021

கரோனாவால் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி : டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வழங்கினார்

 






டெல்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியரின் குடும்பத்துக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ரூ.1 கோடி நிதி வழங்கினார்.



டெல்லியின் நரைனா பகுதியில் உள்ள எம்.சி. அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் நிதின் தன்வார். கடந்த ஆண்டு கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் பணியில் நிதின் ஈடுபடுத்தப்பட்டார். பின்னர்வேறு சில பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டார். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்கடந்த டிசம்பர் மாதம் ஆர்எம்எல்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு பெற்றோர், மனைவி, மகள் உள்ளனர்.



இந்நிலையில், டெல்லி அரசு சார்பில் நிதின் தன்வார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை நிதின் மனைவியிடம் முதல்வர் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் வழங்கினார்.



இதுகுறித்து கேஜ்ரிவால் கூறும் போது, “தன்வார் கடுமையான உழைப்பாளி. அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றினார். இவ

ரைப் போன்றவர்களின் உதவியால் கரோனாவுக்கு எதிராக அரசுகடுமையாக போராடி வருகிறது. அவரது இழப்பை ஈடுகட்ட இய

லாது. ஆனாலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு அரசு பள்ளியில் வேலையும் வழங்கப்படும்” என்றார். - பிடிஐ






Post Top Ad