ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு பணி - மாவட்ட ஆட்சியர் ஆணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 27, 2021

ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு பணி - மாவட்ட ஆட்சியர் ஆணை

 




பள்ளி பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.



இதற்கான முதல் உத்தரவை, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்ற வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட உள்ளதாக, இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.



இதுபற்றி, தமிழக தலைமை செயலர், சுகாதார செயலர், பள்ளி கல்வி செயலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி வழங்க அனுமதித்தனர். இதன்படி, முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரானா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. 



அந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில், '24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில், தினமும் ஆறு மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார். இதேபோல, மற்ற மாவட்டங்களிலும், பல்வேறு வகையான கொரோனா தடுப்பு பணிகளில், ஆசிரியர்களை பணியமர்த்த, நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.விரைவில், அதற்கான உத்தரவுகள், மாவட்ட கலெக்டர்களால் பிறப்பிக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.-



30க்குள் தடுப்பூசி போட 'கெடு'பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 30ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம்போட்டுக் கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'இ - மெயில்' வழியே அனுப்பியுள்ளது.இதற்கிடையில், அனைத்து துறை செயலர்களுக்கும், கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'அரசு ஊழியர்களில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் விபரங்களை வரும், 30க்குள் அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.



















Post Top Ad