தேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 7, 2021

தேர்தல் வாக்கு பதிவில் புகார் - ஆசிரியர் பணியிடை நீக்கம்

 






வாக்குச்சாவடியில் பார்வையற்ற மூதாட்டியின் வாக்கினை சொன்ன சின்னத்தில் பதிவு செய்யாமல் மாற்று சின்னத்தில் பதிவு செய்த தேர்தல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.




புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராங்கியம் கிராமத்தில் உள்ள அரசமரம் வாக்குச்சாவடியில் 85 வயது பார்வையற்ற மூதாட்டி வாக்கு செலுத்த வந்தார். அங்கு வந்த அவர் தேர்தல் பணியில் இருந்த பெண் அதிகாரி அக்சரா பானுவிடம் வாக்களிக்க உதவுமாறு கூறியுள்ளார். ஆனால் அதிகாரி மூதாட்டி சொன்ன சின்னத்தில் வாக்களிக்காமல் மாற்று சின்னத்தில் வாக்கை பதிவு செய்ததாக மூதாட்டியுடன் வந்தவர்கள் புகார் அளித்தனர்.



 





அத்துடன், பெண் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காப்படாததை கண்டித்தும், அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்றும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை தேர்தல் பணியில் இருந்து பணி நீக்கம் செய்தார். இதனையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர் அந்த இடத்தில் மாற்று அதிகாரி நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.



இந்த போராட்டத்தால் வாக்குப்பதிவு இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.




தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.





Post Top Ad