பிளஸ் 2 தேர்வு தள்ளி போகுமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 15, 2021

பிளஸ் 2 தேர்வு தள்ளி போகுமா?

 







சி.பி.எஸ்.இ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வை திட்ட மிட்டபடி நடத்துவது குறித்து, இன்று பள்ளிக் கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்த உள்ளனர்.




நாடு முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தேதி, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மே 4 முதல், ஜூன் வரை நடத்தப்படவிருந்த பிளஸ் 2 தேர்வுகளை, சூழ்நிலைக்கேற்ப நடத்துவது குறித்து, ஜூனில் முடிவு எடுக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


அதே நேரம், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது; இதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 



வரும், 16ம் தேதி மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது.தற்போது, சி.பி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதால், தமிழக பிளஸ் 2 தேர்வும் தள்ளி வைக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.


'சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, தேர்வு குறித்து உரிய முடிவு எடுக்கப் படும்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.



தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கைபா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதும், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில், மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட, சரியான நடவடிக்கை இதுவாகும்.




சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என, பா.ம.க., தான் குரல் கொடுத்தது. அந்த வகையில், மத்திய அரசின் நடவடிக்கை, பா.ம.க.,வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம், சி.பி.எஸ்.இ., போன்று, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Post Top Ad