கொரோனா அறிகுறிகள் - ஆய்வில் புதிய தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 30, 2021

கொரோனா அறிகுறிகள் - ஆய்வில் புதிய தகவல்

 







காய்ச்சல், தலைவலி, மூச்சத் திணறல் என இதுவரை கொரோனா அறிகுறிகள் என்று சொல்லப்பட்டு வந்தன. தற்போது சர்வதேச சுகாதாரக் குழுவினர் நடத்திய புதிய ஆய்வில், கொரோனா வைரஸ், வாய்ப் பகுதியில் இருக்கும் செல்களை கடுமையாக பாதித்து, அதனால் வாய் மற்றும் உதடு வறண்டு போதல், சுவை அறியும் திறன் குறைவது மற்றும் உதடு வெடிப்பு அல்லது கட்டிகள்  ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.



இந்த ஆய்வு முடிவுகளுக்கு கர்நாடக சுகாதாரத் துறையினரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் மார்ச் 25-ஆம் தேதி வெளிவந்த இயற்கை மருத்துவம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


தற்போது கொரோனா வைரஸ், ஒரு மனித  உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உருமாறியிருப்பதாகவும், அதில், வாய்ப் பகுதியில் உள்ள செல்களை அழித்து, வாய் மற்றும் உதடு வறண்டு போவது, சுவை அறியும் திறன் இல்லாமல் போவது, வெடிப்பு அல்லது கட்டிகள்  ஏற்படுவதும் கரோனாவின் அறிகுறி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அது மட்டுமல்ல, வாய்ப்பகுதியை தாக்கும் கொரோனா வைரஸ் மூலம், ஒரு மனிதனின் செரிமானப் பகுதி மற்றும் நுரையீரலுக்கும் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


இதுபோல, கொரோனா நோயாளிகளில் சிலருக்கு அறிகுறிகள் இருப்பதை தான் கவனித்ததாக மணிப்பால் மருத்துவமனை மருத்துவர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.



Post Top Ad