9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 19, 2021

9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை??

 






தமிழகத்தில் ஓராண்டுக்குப் பின், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க, கொரோனா ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. தற்போது முற்றிலும் ஊரடங்கு நீக்கப்பட்டதால், கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு இன்றி, மக்கள் முக கவசம் கூட அணியாமல், பொது இடங்களுக்கு செல்வதை காண முடிகிறது.


இந்த அலட்சியபோக்கால், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர், அரியலுாரில், ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியானது போல, கோவையிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு, தொற்று இருப்பது உறுதியானதால், சக ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.கல்வித்துறைக்கு முறையாக தகவல் அளிக்காத தலைமை ஆசிரியர்களால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தொற்று ஏற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் மட்டுமே, பரவுவதை தடுக்க முடியும்.


இதுபோன்ற இக்கட்டான சூழலில், ஏப்., மாதத்திற்கு பிறகும் பள்ளிகள் தொடரும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பது, பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவத்சலம் கூறுகையில், ''தேர்தல் பணிகளுக்கு, ஏப்., ஒன்றாம் தேதி, பள்ளிகளை ஒப்படைத்தாக வேண்டும். இம்மாத இறுதிக்குள், தொற்று வேகமாக மாணவர்களுக்கும் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். பொதுத்தேர்வே நடக்காத போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம்.




தேர்தல் முடிந்த பிறகு, பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரும் பட்சத்தில், சமூக இடைவெளி கடைபிடித்தல், வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதில் சிக்கல் இருக்காது.பிற வகுப்பு மாணவர்களும் வரும் பட்சத்தில், பள்ளிக்குள் சமூக இடைவெளி பின்பற்றுவது கேள்விக்குறியாகிவிடும். 


பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இருந்து, மாணவர்கள் வருவதால், தொற்று பரவுவதை தவிர்க்கவும் முடியாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, விடுமுறை அளிப்பதே சிறந்தது,'' என்றார். பரிசீலிக்குமா பள்ளிக்கல்வித்துறை?


Post Top Ad