கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாதா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 27, 2021

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாதா?

 






கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாதா என்ற குழப்பம் பலர் மத்தியில் எழுந்துள்ளது.


ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிலரிடம் சில மருத்துவர்கள் தடுப்பூசி போட்ட சில நாள்களுக்கு அசைவம், குறிப்பாக இறால் சாப்பிடக்கூடாது என்றும் காய்கறிகளில் புரொக்கோலியைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.



கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாதா என்ற குழப்பம் பலர் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான விளக்கத்தைப் பெறுவதற்கு தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்:



``சில தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கடந்த காலத்தில் அறிவுறுத்தப்பட்டதுண்டு. அதையே இந்தத் தடுப்பூசிக்கும் சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


உண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நன்றாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமிருப்பதால் அவற்றைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இறாலும் அப்படிதான். புரொக்கோலியிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் அதையும் தாரளமாக எடுத்துக்கொள்ளலாம்.




கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் சில நாள்களுக்கு புகை, மதுவைத் தொட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். காரணம், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் புகை பிடித்தல், மது குடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் நோய்த்தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாவது தாமதமாகும். மேலும் தடுப்பூசியின் செயல்திறனும் முழுமையாகச் செயலாற்றாது" என்றார்.




Post Top Ad