ஆண்டுக்கு இருமுறை ‘நீட் தேர்வு’ – மத்திய அரசு ஒப்புதல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 10, 2021

ஆண்டுக்கு இருமுறை ‘நீட் தேர்வு’ – மத்திய அரசு ஒப்புதல்

 






நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வு ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுவது போல் நீட் தேர்வுகளுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள்: மத்திய அரசு தனது உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு முறையை பின்பற்றி வருகிறது. பொறியியல் துறைகளுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் மதிப்பெண் மூலம் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 




முன்னதாக வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்ட இந்த தேர்வு நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஒன்றில் இருந்து நான்கு முறைகள் வரை தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் மாணவர் எடுத்த அதிக மதிப்பெண்கள் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும்.


நீட் தேர்வு: தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்கு முன்னாள் எய்ம்ஸ், பிஜிஐஎம்ஆர் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களின் தனிப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை இரண்டு முறை நடத்தின. ஆனால் தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இந்தியாவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற இளங்கலை படிப்புகளுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.



மத்திய அரசு ஒப்புதல்: ஜேஇஇ நுழைவுத் தேர்வை போல் நீட் தேர்வுக்கும் மாணவர்கள் அதிக வாய்ப்பு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தேர்வில் மாணவர் எடுத்திருக்கும் அதிக மதிப்பெண்கள் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நடப்பு ஆண்டின் முதல் நீட் தேர்வுக்கான தேதி தேசிய தேர்வு முகமையினால் விரைவில் வெளியிடப்படும்.

Post Top Ad