பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் -பள்ளிக்கல்வித்துறை. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 7, 2021

பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் -பள்ளிக்கல்வித்துறை.

 






நாளை மறுநாள் முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளதால் பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர்.



இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கவுள்ளதால் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடதப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டடது.


சமீபத்தில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் வரும் பிப்ரவரி 8-ஆம்தேதி (அதாவது நாளை மறுநாள்) 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post Top Ad