பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, February 16, 2021

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.


குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த காரணத்தினாலும், பாடங்களை சீக்கிரம் முடிக்கும் நோக்கிலும் பள்ளிகள் வாரத்துக்கு 6 நாட்கள் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த 6 நாட்கள் பள்ளித் திறப்புக்கு பதில் 1வது மற்றும் 3வது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். முதல் மற்றும் 3-ம் வகுப்பு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது எனவும் கூறினார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை எனவும், உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்

Recommend For You

Post Top Ad