இன்று பட்ஜெட் - அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 23, 2021

இன்று பட்ஜெட் - அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

 






தமிழக அரசின், 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.



பொதுத் தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், இன்று துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 - 22ம் நிதி ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக, 11வது முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், மே 24ல் நிறைவடைவதால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


 இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கைகள் வைத்துள்ளனர் அதில் முக்கியமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மேலும் பல்வேறு பணம் பலன் சார்ந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன கோரிக்கைகள் மீது இன்று வெளியாகும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்



மேலும், சட்டசபை தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர், எத்தனை நாள் நடக்கும் என்பது, இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடக்கும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவாகும்.


இந்த கூட்டத் தொடரில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், 110 விதியின் கீழ், ஏராளமான புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட உள்ளார். கடந்த சட்டசபை கூட்டத் தொடரை, தி.மு.க., கூட்டணி முழுமையாக புறக்கணித்தது. இந்த கூட்டத் தொடரில், தி.மு.க., கூட்டணி கட்சிகள், முழுமையாக பங்கேற்குமா என்பதும், இன்று தெரியும்.

Post Top Ad