இனி பள்ளிகள் மூடல் கிடையாது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 27, 2021

இனி பள்ளிகள் மூடல் கிடையாது

 





மாணவர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பிருந்தால், பள்ளியை மூடாமல், அந்த வகுப்பறையை மட்டும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன; 10 மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடந்தன. பின், கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், டிச., 2ல் கல்லுாரிகளும்; ஜன., 19ல் பள்ளிகளும் திறக்கப்பட்டன.கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களும், பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.




பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, ஜன., 20 முதல் அரசு பள்ளிகளில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.அதில், மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே, அறிகுறியில்லாத கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், தற்காலிகமாக மூடப்பட்டன.




இந்நிலையில், இனி வரும் நாட்களில், மாணவர்களுக்கு தொற்று உறுதியானாலும், பள்ளிகளை மூட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகளை மட்டும் மூடி, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். தொற்று உள்ள மாணவரின் வகுப்பறையில் உள்ள, நெருக்கமான மாணவர்களுக்கு மட்டும், தொற்று சோதனை நடத்த வேண்டும்.



அதில், தொற்று உள்ளவர்களை மட்டும் சிகிச்சைக்கு அனுப்பி விட்டு, மற்றவர்களை தினமும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். வகுப்பறையை வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post Top Ad