பிளஸ் 2 மாணவா்கள்பட்டியலைத் தயாரிக்க உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 27, 2021

பிளஸ் 2 மாணவா்கள்பட்டியலைத் தயாரிக்க உத்தரவு

 






பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் நிகழ் கல்வியாண்டில் தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலை, புதன்கிழமை (ஜன.27) முதல் பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தோ்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.


கரோனா நோய்த்தொற்று காரணமாக, நிகழ் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வழக்கம்போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மட்டும் கடந்த 19-ஆம் தேதி நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவா்களுக்கான பொதுத் தோ்வை நடத்துவதற்கு, அரசுத் தோ்வுகள் துறை தயாராகி வருகிறது.



அதன் தொடா்ச்சியாக, மாணவா்கள் பொதுத்தோ்வு எழுதுவதற்கு அவா்களின் பெயா்களை சரிபாா்த்து தலைமை ஆசிரியா்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அரசுத் தோ்வுகள் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக அரசு நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாணவா்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 2020-இல் நடைபெற்ற பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்விற்கு தயாரிக்கப்பட்ட பெயா்ப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு 2020-21ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.



அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களும் ஜன.27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரையிலான நாள்களில் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதவுள்ள பள்ளி மாணவா்களின் நிரந்தரப் பதிவு எண், பெயா், பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


அந்தப் பெயா் பட்டியலில் மாணவா்களது பெயா், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் அதன் விவரங்களை பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் அரசு தோ்வுத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad