கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் 10 தேன் பிராண்டுகளின் தயாரிப்புகள் தோல்வி.. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 3, 2020

கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் 10 தேன் பிராண்டுகளின் தயாரிப்புகள் தோல்வி..

 






முக்கிய பிராண்டுகளால் விற்பனை செய்யப்படும் தேனின் அசல் தூய்மைக்கான பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) கண்டறிந்துள்ளது.


தேன் வணிகத்தில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனங்கள் தேனுடன் கலப்படம் செய்வதற்காக சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரை பாகை இறக்குமதி செய்கின்றன என்பது  தெரிய வந்துள்ளது.



சுத்தமான தேன் என்ற முத்திரையைப் பெற வேண்டும் என்றால், 18 பரிசோதனைகளில் அந்தத் தேன் வென்றாக வேண்டும். ஆனால், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13-ல் 10 முன்னணி நிறுவனங்கள் இந்த சோதனையில் தோல்வியுற்றுள்ளன.




அது மட்டுமல்ல, இந்த பரிசோதனைகளில் தோல்விகண்ட பல முன்னணி தேன் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது நிறுவன வளர்ச்சிக்காக சிந்தெடிக் சுகர் எனப்படும் ஒருவித செயற்கை சர்க்கரைப் பாகைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.




அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய தேன் பரிசோதனையில், தோல்வி கண்ட தேன் நிறுவனங்களின் தேன் தயாரிப்பு குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தேன் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேன் மற்றும் கச்சா தேன் ஆகியவற்றை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சோதனைக்கு எடுத்துக்கொண்டது.




இந்தியாவில் உள்ள பரிசோதனை மையங்களில் நடத்தப்படும் பெரும்பாலான சோதனைகளில் இந்தத் தேன் நிறுவனங்கள் வெற்றி பெற்றாலும், ஒரே ஒரு சோதனையில் - அதன் ஆய்வகம் ஜெர்மனியில்தான் உள்ளது - சோதனைக்கு உள்படுத்தப்பட்ட 13 தேன் நிறுவனங்களில் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கின்றன. 




பொதுவாக இந்தியாவில் சுத்தமான தேன் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய இந்த பரிசோதனை தேவையில்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நிச்சயம் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad