பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு. - Asiriyar.Net

Post Top Ad


Saturday, December 19, 2020

பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு.

 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.

Recommend For You

Post Top Ad