G.O 103 - க‌ணி‌னி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு நிபந்தனை தளர்வு - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 6, 2020

G.O 103 - க‌ணி‌னி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு நிபந்தனை தளர்வு - அரசாணை வெளியீடு.

 



பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் க‌ணி‌னி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு.



ஆணை : 

ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர் தரத்தில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களை கணினி பயிற்றுநர் நிலை II என பெயர் மாற்றம் ( Re - designate ) செய்தும் , தேசிய ஆசிரியர் கல்வி குழும ( NCTE ) விதிமுறைகளில் தெரிவித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் புதியதாக கணினி பயிற்றுநர் நிலை- I பணியிடங்களை ரூ .36900 - 116600 என்ற ஊதியக்கட்டில் தோற்றுவித்தும் , பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர் பணியிடங்களில் 814 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை 814 காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்படைப்பதன் மூலம் தோற்றுவித்தும் , புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 814 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக் கொள்ளவும் , ஏற்கனவே கணினி பயிற்றுநர் நிலை II இல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று , தேசிய ஆசிரியர் கல்வி குழும ( NCTE ) விதிமுறைகளில் தெரிவித்துள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களை கணினி பயிற்றுநர் நிலை -1 ஆக தரமுயர்த்தவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.












Post Top Ad